காண்டூர் கால்வாயில் ட்ரக்கிங் செல்ல குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு
காண்டூர் கால்வாய் வழியாக ட்ரெக்கிங் செல்ல எதிர்ப்பு 
காண்டூர் கால்வாய் வழியாக ட்ரக்கிங் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ட்ரக் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் கனால் பேங்க் என்ற பெயரில் வனத்துறை சார்பாக ட்ரக்கிங் அழைத்துச் செல்லப்படுகிறது.
பிஏபி திட்டத்தின் உயிர்நாடியாக கருதப்படுவது காண்டூர் கால்வாய்.
இந்த கால்வாயில் ஏதாவது ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டாலோ, கால்வாய்க்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ கோவை, திருப்பூர் மாவட்டம் கடும் வறட்சியில் சிக்கிவிடும். இதனால் காண்டூர் கால்வாய் பொதுப்பணி துறையால் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ட்ரக் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் காண்டூர் கால்வாய் வழியாக பிஏபி திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாத பல நபர்களை ட்ரக்கிங் அழைத்து சென்று வருகின்றனர். இப்படி ட்ரெக்கிங் செல்பவர்கள் காண்டூர் கால்வாயை வீடியோவாக பதிவு செய்து இதில் ட்ரெக்கிங் செல்வது மிகுந்த ஆர்வமாக உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் காண்டூர் கால்வாய் வழியாக ட்ரக்கிங் செல்ல அதிகமானோர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. காண்டூர் கால்வாயில் ட்ரக்கிங் அழைத்து செல்ல விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் விவசாயிகள் சார்பாக காண்டூர் கால்வாய் வழியாக ட்ரக்கிங் அழைத்து செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
No comments