Breaking News

பொள்ளாச்சியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இருவர் கைது


பொள்ளாச்சியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துஅவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள தாளக்கரை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்யும் நேபாள நாட்டைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் கவுதம் உள்ளிட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
 அப்போது சோதனையில் சுமார் ஒரு கிலோ கஞ்சா சாக்லேட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்காக வைத்திருந்த நேபாள நாட்டை சேர்ந்த சஞ்சிப் குமார் யாதவ், ஸ்ரீதேவ்குமார் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

No comments