மாசாணியம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜைகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறவுள்ளது.
3ம் தேதி மகேஷ்வரி அம்மன் அலங்காரம், 4ம் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரம், 5ம் தேதி வராகி அம்மன் அலங்கார பூஜைகள், 6ம் தேதி மகாலட்சுமி அம்மன் அலங்காரம், 7ம் தேதி மோகினி அலங்கார பூஜை, 8ம் தேதி சண்டிகாதேவி அலங்காரம், 9ம் தேதி சாம்பவி துர்க்கை அலங்கார பூஜை, 10ம் தேதி நரசிம்மா தாரணி அலங்காரம், 11ம் தேதி பரமேஸ்வரி அலங்காரம், 12ம் தேதி விஜயாபார்வதி அலங்கார பூஜைகள் நடைபெறவுள்ளது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
No comments