Breaking News

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வனப்பகுதியில் விதைப்பந்துகள் தூவும் பணி

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுக்கும் விதமாகவும், பத்மபூஷன் அருட்செல்வர் பொள்ளாச்சி நா மகாலிங்கம்  அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் , ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 15 ற்கு (life on land) பங்களிக்கும் விதமாகவும்,
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக ஆனைமலை வனப்பகுதியில் வளரக்கூடிய 10 வகை மரங்களின்  விதைகளை கொண்டு ஒரு லட்சம் விதை பந்துகள் உருவாக்கப்பட்டன. என்சிசி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு லட்சம் விதைப்பந்துகள் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளிடம் அக்டோபர் 2, 2024 அன்று வழங்கப்பட்டது. முன்னதாக காலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆனமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் 
 பர்கவதேஜா அவர்கள் தலைமை தாங்கினார். 2 தமிழ்நாடு விமானப்படை என்சிசி ‌(2TN Air Squadron ) கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் அவர்கள் விதைபந்துகள் உருவாக்கும் பணிக்கு வழிகாட்டி விழாவிற்கு சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பி கோவிந்தசாமி மற்றும் கல்லூரியின் டீன் (Academics and Autonomous) முனைவர் A. செந்தில் குமார் ஆகியோர் விதைப்பந்துகளை தயாரித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
பின்னர் சேத்துமடை வனப்பகுதியில் MCET கல்லூரி என்சிசி மாணவர்களால் விதைப்பந்துகள் தூவும் பணி துவங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தை சார்ந்த பொள்ளாச்சி வனச்சரகர் க.ஞான பாலமுருகன் மாணவர்களை வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியை கல்லூரியில் என்சிசி அதிகாரிகள் கேப்டன் B. சரவணகுமார் மற்றும் ஃலையிங் ஆபிஸர் S.C. லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

No comments