பொள்ளாச்சி நகராட்சி கூட்டம்
நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆணையாளர் கணேசன், துணைத் தலைவர் கௌதமன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பங்கேற்று தீர்மானங்கள் மீது விவாதங்கள் செய்தனர். நகர் மன்ற கூட்டம் மற்றும் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக நகராட்சி ஆணையருக்கு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். மேலும் முனைவர் பட்டம் பெற்ற நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணனுக்கு துணைத் தலைவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். நகராட்சியில் சொத்து வரிகளை உயர்த்தக் கூடாது என நகர்மன்ற உறுப்பினர் துரைபாய் கோரிக்கை வைத்தார்.
மொத்தம் 104 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments