திருப்பூரில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்
நெருப்பெரிச்சல் பகுதி கழகத்தின் சார்பாக , பகுதி கழக செயலாளர் பட்டுலிங்கம் தலைமையில் புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
மேலிட பார்வையாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் வார்டு வாரியாக உறுப்பினர் அட்டைகள் வழங்கி பணிகள் குறித்து ஆய்வு செய்து உரையாற்றினார்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் K.N.விஜயகுமார் முன்னிலை வகித்தார் .
இந்நிகழ்வில், மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், மாமன்ற உறுப்பினர்கள் SMS. துரை, இந்திராணி ஆனந்தன் , வார்டு கழக செயலாளர்கள் நாச்சிமுத்து , இமானுவேல், முருகன், செல்வம் ஒன்றிய அவை தலைவரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ஐஸ்வர்யா மகாராஜ், பகுதி கழக துணைச் செயலாளர் மூர்த்தி,மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments