Breaking News

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் திறம்பட கேள் நிகழ்வு



அரசு உயர்நிலைப்பள்ளி பெத்தநாயக்கனூரில் மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை திறம்படக் கேள் நிகழ்வு நடந்து வருகின்றது. இதுவரை 32 நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.  இதில் அக்டோபர் மாதத்திற்கான நிகழ்வு சடாகோ சசாகி நினைவு நாளாக நடந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டின் கதிர்வீச்சினால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜப்பானியச் சிறுமி சடாகோ சசாகியின் மறைவை உலகம் எங்கும் அமைதி தினமாக கொண்டாடி வருகின்றனர். நோய்வாய்பட்டிருந்த நாளில் சடாகோ 1000 கொக்குகள் செய்ய முயற்சி செய்து முடியாமல் மறைந்து விடுகிறார். அவர் இறந்த தினத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள குழந்தைகள் ஓரிகாமி எனும் கலை வடிவத்தில் காகிதத்தாளில் கொக்குகள் செய்து சடாகோ சசாகிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதை நினைவு கூறும் வகையில் பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் வண்ணக் காகிதங்களில் கொக்குகள் செய்து அதை நூலில் கட்டி பறக்க விட்டனர். அப்போது போர் இல்லாத உலகம் வேண்டும் என்னும் முழக்கத்தை உண்டாக்கினர்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து சடாகோ சசாகி பற்றி குழந்தைகளிடம் நினைவு கூறினார். தமிழாசிரியர் பாலமுருகன் குழந்தைகளுக்கு காகிதத்தில் கொக்கு செய்து காட்டினார். மேலும் மாணவர்கள் ஜீவா மற்றும் ஜீவபாரதி ஆகியோரும் குழந்தைகளுக்கு கொக்குகள் செய்து காட்டி அனைவரையும் செய்ய ஊக்கம் கொடுத்தனர். 

No comments