Breaking News

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் எஸ் பி ஆய்வு



பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
   பொள்ளாச்சி பேருந்து நிலையங்கள், சுற்றுவட்டார பகுதிகளில் பான் மசாலா, குட்கா, போதை வஸ்துக்கள்,லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் காவலர் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகிறார்களா என கோப்புகளை ஆய்வு செய்தார்.
பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். இதனால், பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

No comments