சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
 பொள்ளாச்சி - வால்பாறை மெயின் ரோடு நா.மூ சுங்கம்  பாலாறு பாலம் அருகே இன்று வால்பாறைக்கு சுற்றுலா செல்ல வேண்டி இருசக்கர வாகனத்தை திருப்பூரை சேர்ந்த காவியா ஸ்ரீ (20) என்பவர் ஓட்ட அவிநாசியை சேர்ந்த சபரி(19) என்பவர் பின்னால் அமர்ந்து பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை  நோக்கி சென்றுள்ளனர். முன்னாள் சென்ற இரு கார்களை முந்தி செல்லும்போது பொங்காளியூரில் இருந்து பொள்ளாச்சி செல்ல அ சட்டரசு பேருந்தை உதயகுமார் (26) ஓட்டி வர எதிரே வந்த மேற்படி இரு சக்கர வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.  சம்பவம் தொடர்பாக ஆழியார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments