Breaking News

வால்பாறையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது

வால்பாறை பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கோவை மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் போலீசார் வால்பாறை புதிய பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, வால்பாறை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வெற்றிவேல் (19) ஸ்ரீராம் பாபா (21) வால்பாறை நல்ல காத்து எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்தி (22) கோடி காலனி பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரவீன் (22) ஆகிய நான்கு பேரிடமும் 300 கிராம் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் உள்ளூர் நபர்கள் மற்றும் தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகளையும் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக தெரிய வருகிறது.

No comments