நியாய விலை கடை அமைக்க பூமி பூஜை
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி மதுக்கரை ஒன்றியம் செட்டிபாளையம் பேரூராட்சி பகுதியில் புதிய நியாய விலைக்கடை அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024 - 2025 ஆம் ஆண்டின் நிதியிலிருந்து ரூபாய் 10,50,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இதற்கான பூமி பூஜையில் செ. தாமோதரன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம், செட்டிபாளையம் பேரூராட்சி செயலாளர் கண்டியப்பன், வார்டு செயலாளர் VRB லோகநாதன், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments