பூமி பூஜையை துவக்கி வைத்த எம்எல்ஏ செ.தாமோதரன்
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி மதுக்கரை நகராட்சி வார்டு எண் 5 மற்றும் வார்டு எண் 11 ஆகிய பகுதிகளில் ரூபாய். 19,50,000/- மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையில் செ. தாமோதரன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை A. சண்முகம், மதுக்கரை நகர செயலாளர் K. சண்முகராஜா, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments