*ஒவ்வொரு நாளும் வெற்றித் திருநாள் தான்*.. ஆன்மீகப் பேச்சாளர் *தனமணி வெங்கட்* பேச்சு
பொள்ளாச்சி கம்பன் கலைமன்றத்தின் சார்பாக மாதம் தோறும் இரண்டாவது சனிக்கிழமை தமிழ் இலக்கியம் மற்றும் சமூகச் சிந்தனையுள்ள நிகழ்வுகள் 1994ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக அக்டோபர் மாதத்திற்குண்டான 361வது நிகழ்ச்சி *“வெற்றித் திருநாள்“* என்ற தலைப்பில் பொள்ளாச்சி அரிமா சங்க கட்டடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் கோகுலகிருஷ்ணன் மற்றும் சஞ்சய் ராஜ் குழுவினரின் இன்னிசையும் அதைத் தொடர்ந்து பொங்காளியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கம்பன் கலை மன்றத்தின் ஆலோசகர் *இரா. செல்வராசு அவர்கள்* தலைமை தாங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த *ஆன்மிகப் பேச்சாளர் தனமணி வெங்கட்* அவர்கள் கலந்து கொண்டார்.
அவர் சிறப்புரையாக விஜயதசமி குறித்தும், கல்வி குறித்தும் மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
நல்ல குழந்தைகளிடம் இருந்துதான் நல்ல சமுதாயம் உருவாகும். நல்ல குழந்தைகளின் வெற்றிக்கான காரணிகளில் முக்கியமானது வீட்டின் சமையல் அறைகள்தான் என்றார்.
குழந்தைகள் எந்த உணவை விரும்பி உண்கின்றனரோ அவர்களின் மனநிலையும் அந்த உணவைப் போலவே அமைகின்றது என்றார். வெளியில் இருந்து வாங்கப்படும் உணவுவகைளை விட குழந்தைகளுக்கு பாசத்துடன் தாய் சமைக்கும் உணவுகள்தான் சிறந்தது என்று குழந்தைகள் நலனிற்கு உகந்த கருத்துகளைக் கூறினார்.
நிகழ்வில் ஆன்மிக இசைப் பாடகர் *ஜெயப்பிரகாஷ் நாராயணன் எம்.ஏ.,(இசை) *அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மொழி வாயிலாக சிறந்த பக்திப்பாடல்களைப் பாடி அனைவரின் செவிகளையும் குளிர வைத்தார்.
விழாவின் வரவேற்புரையை த.குமாரும், நன்றியுரையை பழ.கனகராசு அவர்களும் வழங்கினர்.
No comments