Breaking News

கிணத்துக்கடவில் எம்எல்ஏ செ.தாமோதரன் தலைமையில் அதிமுக போராட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை இருப்பதாக கூறி அதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  தி.மு.க ஆட்சியில் 2-வது முறையாக 6% சொத்துவரியை உயர்த்தி அதற்கு 1% அபராதமும் விதித்ததை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கிணத்துக்கடவு பேருராட்சியில் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரும், கிணத்துக்கடவு எம்எல்ஏவும் ஆன செ.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. 
உடன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள், 
கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, 
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிங், கார்த்திகேயன் 
கிணத்துக்கடவு ஒன்றிய பெருந்தலைவர் நாகராணி, 
ஒன்றிய குழு உறுப்பினர் கலாமணி வரதராஜ், 
ஊராட்சி மன்ற தலைவர்கள் சொலவம்பாளையம் ஊராட்சி சின்ராசு (எ) செந்தில்குமார், 
குதிரையாலாம் பாளையம் ஊராட்சி தர்மராஜ், 
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி நகர் ராதாகிருஷ்ணன், 
சிங்கையன்புதூர் குயில்சாமி, சொக்கனூர் ரங்கராஜ், நாராயணசாமி, சத்தீயசீலன், 
வடபுதூர் மயில்சாமி, சிவலிங்கம், ராமலிங்கம், 
நெம்பர்.10 முத்தூர் சக்திவேல், 
பிரபு, லட்சுமணன், கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments