Breaking News

மாசாணியம்மன் கோயிலில் நவராத்திரி கலை விழா


ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நவராத்திரி கலை விழாவின் ஆறாம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சண்டிகாதேவி அலங்காரத்தில் அம்மன் அருள்புரிந்தார். 
பொள்ளாச்சி ப்ரிஹாத் நாட்டியாலயா மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 
நாட்டியக் குழுவினரையும், முக்கியப் பிரமுகர்களையும் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன் வரவேற்றார். இந்நிகழ்வில் அறங்காவலர் மஞ்சுளாதேவி, கவிஞர் சிற்பியின் தனிச்செயலர் பாலசுப்பிரமணியன் திருக்கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

No comments