Breaking News

வால்பாறையில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை இருப்பதாக கூறி அதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறையில் அதிமுக சார்பில் நகர செயலாளர் மயில்கணேசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க நிர்வாகி வால்பாறை அமீது முன்னிலை வகித்தார்.  சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சொத்து வரி, உயர்வு,விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. நகர துணை செயலாளர் பொன் கணேஷ் நன்றி கூறினார்.இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதிமுக சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வால்பாறை நகராட்சியில் ஆணையாளரை மாற்றி விடுகின்றனர். இதனால், நாங்கள் முறையிடும் எந்தவொரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுவதில்லை. மேலும் எஸ்டேட் பகுதிகளுக்கு மக்களை சந்திக்க செல்லும்போது அவர்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது நடந்த நகராட்சி கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு தொழில்வரி பிடித்தம் செய்ய வேண்டுமென்று ஐந்து நகராட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதால் அதிமுக சார்பில் தொழிலாளர்களிடம் தொழில்வரி பிடிக்க கூடாது என்று கடந்த இரண்டு வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் தொழில்வரி பிடித்தம் செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளனர். அவ்வாறு தொழில்வரி பிடித்தம் செய்யும் எண்ணம் இருந்தால் அதை இப்போதே கைவிட்டு விடுங்கள். இல்லையென்றால் 20 கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழையாத வகையில் நாங்கள் போராட்டம் நடத்த வேண்டுமென்று எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.  இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் ஜே.மணிகண்டன், நகர அவைத் தலைவர் சுடர் பாலு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஆர். ஆர். பெருமாள், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். நரசப்பன், வர்த்தக அணி செயலாளர் ஆர். சண்முகவேலு, ஐ.டி.விங் செயலாளர் சண்முகம், நகர இணை செயலாளர் விமலா, வார்டு செயலாளர்கள் எஸ்.கே. எஸ் பாலு கண்ணன் எம் ஆர் எஸ் மோகன், சோலையார் ராம்குமார், கொங்கு மாரிமுத்து, சி.டி.சி அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் செந்தூர் பாண்டி, முத்துக்குமார், வசந்தகுமார், சேகர், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments