Breaking News

ஆராதனா மருத்துவமனை சார்பில் மாரத்தான் பந்தயம்

உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி ஆராதனா மருத்துவமனை சார்பில் ரன் ஃபார் ஸ்ட்ராங் போன்ஸ் என்னும் மாரத்தான் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 200க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர்.  50-க்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் தொடங்கிய மாரத்தான் பந்தயம் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பி ஏ கல்லூரியில் நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினராக மருத்துவர் ராஜா, ஆராதனா மருத்துவமனையின் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்று உடற்பயிற்சி மற்றும் சூரிய ஒளியின் பயன்கள் குறித்து பேசினர். ஆஸ்டியோபோரோசிஸ் நோய் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிஏ கல்லூரி தலைவர் அப்புகுட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நர்மதா சண்முகசுந்தரம் கூறுகையில்., என்றும் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆராதனா மருத்துவமனை அதிக பங்களிக்கிறது என்றார்.

No comments