நவராத்திரி கலை விழா
ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கலை விழாவின் மூன்றாம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வராகி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்புரிந்தார்.
திருப்பூரைச் சேர்ந்த கர்நாடக சங்கீதப் பாடகி சண்முகபாக்யஸ்ரீ தன் குழுவினருடன் வருகை தந்து இசை நிகழ்ச்சி நிகழ்த்தினார். இசைக் குழுவினரையும், முக்கியப் பிரமுகர்களையும் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன் வரவேற்றார். இந்நிகழ்வில் அறங்காவலர் மருதமுத்து, புன்னகை பூ ஜெயக்குமார், கவிஞர் சிற்பியின் தனிச்செயலர் பாலசுப்பிரமணியன், திருக்கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments