Breaking News

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா



பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கல்வி மற்றும் தன்னாட்சி டீன் செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி ஆண்டறிக்கை வாசித்தார். என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி தலைமை வகித்தார். பெங்களூரு சாலிடன் டெக்னாலஜிஸ் நிறுவனர் கணேஷ் தேவராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 918 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கல்வியில் சிறந்த 11 மாணவர்களுக்கு தங்கம், 11 வெள்ளிப்பதக்கங்கள், 11 வெண்கலப்பதங்களுக்கு வழங்கப்பட்டன. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கோதை நன்றி கூறினார்.
நிகழ்வில், ஆராய்ச்சி டீன் ராமகிருஷ்ணன், தொழில் உறவுகள் டீன் கேல்வின்சோபிஸ்டஸ்கிங், பொள்ளாச்சி தமிழிசை சங்க செயலாளர் சண்முகம், என்ஐஏ கல்வி நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

---

No comments