பிஏபி தினம் கொண்டாட்டம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் எனும் பிஏபி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தமிழகத்தின் இரண்டு மாவட்டங்கள் தவிர கேரளாவின் பாலக்காடு மாவட்டமும் பயன்பெறுகிறது.
 இந்த திட்டம் உருவான நாளான அக்டோபர் 7ஆம் தேதி பிஏபி திட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பிஏபி திட்ட தினம் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது.
 திங்கள்கிழமை அன்று பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டம் தினம் கொண்டாடப்பட்டது.
 இந்த திட்டம் உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர், முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான பொள்ளாச்சி மகாலிங்கம், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த கே.எல்.
ராவ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, சார்- ஆட்சியர் கேத்தரின் சரண்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகன் மாணிக்கம், திருமூர்த்தி நீர் தேக்கத் திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு நீர் தேக்கத்திட்ட குழு தலைவர் செந்தில், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர் இது தவிர கோவை திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று மரியாதை செய்தனர்.
 
No comments