மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பில் ரூ.83,70,893/- கிடைக்கப்பெற்றது.  
அதில்  நிரந்தர உண்டியல் திறப்பில்  ரூ. 60,46,517/- தட்டுக்காணிக்கை உண்டியல் திறப்பில் ரூ.23,24,376/-  கிடைக்கபெற்றது.பலமாற்றுப் பொன்னினங்கள் 178 கிராம், பலமாற்று வெள்ளியினங்கள் 304 கிராம்  கிடைக்கப்பெற்றது. உண்டியல் திறப்பில் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி,  விநாயகர் கோயில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, பொள்ளாச்சி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்பாக்கியவதி, சலவநாயக்கன்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும்  தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
 
No comments