சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு
வால்பாறையில் நான்கு வயது குழந்தையை. சிறுத்தை. தாக்கியதில் உயிரிழப்பு அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து ஊசிமலை மட்டம் எஸ்டேட்டில் வட மாநில தொழிலாளிகள் குடியிருந்து வருகின்றனர்.  குடியிருப்பு அருகில் வடமாநில தொழிலாளியின் நான்கு வயது சிறுமி அப்சர்  கத்துவின் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தேயிலை செடியில் பதுங்கி இருந்த சிறுத்தை அக்குழந்தையை தூக்கிச் சென்று விட்டது. உடனே அருகில் உள்ளவர்களுக்கு குழந்தை  சத்தம் கேட்டு காட்டுப் பகுதியில் தேடி குழந்தையை மீட்டனர் ஆனால் குழந்தையை சிறுத்தை கொன்று விட்டது எனவே வால்பாறை வனத்துறையினர் தகவல் அறிந்து அங்கு சென்றார்கள் அதுபோல் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அங்குள்ள மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில் பலமுறை  வனத்துறை இடமும் எஸ்டேட் பலமுறை எஸ்டேட் பகுதியில் உள்ள அடர்ந்த புதர்களை அகற்றச் சொல்லி நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது இனியாவது எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் இருக்க வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் புதர்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வனவிலங்கு தொல்லையினால் எங்களது  அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். என்றும் வேதனையோடு கண்ணீரோடு குறிப்பிட்டனர்.
No comments