பொள்ளாச்சி திருவிழா
டிசம்பர் 22ஆம் தேதி பொள்ளாச்சி திருவிழா துவங்க உள்ளது. 
பொள்ளாச்சியின் பாரம்பரியம், கலாச்சாரம், தொழில் வளம், சுற்றுலா போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் பொள்ளாச்சி திருவிழா நடைபெற உள்ளது.
 டிசம்பர் மாதம் 22ஆம் தேதி துவங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 29ம் தேதி வரை நடைபெறுகிறது. ரேக்ளா பந்தயம், குதிரை பந்தயம், வள்ளி கும்மி ஆட்டம், சமையல் திருவிழா, மகளிருக்கான இருசக்கர வாகன ஊர்வலம் உட்பட 50 நிகழ்ச்சிகள் பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தகவலை பொள்ளாச்சி திருவிழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.
No comments