வால்பாறையில் கஞ்சா வழக்கில் மேலும் இருவர் கைது
கஞ்சா வழக்கில் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் தலைமறைவாக இருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி வால்பாறை புதிய பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், வழக்கில் தலைமறைவாக இருந்த வால்பாறை நல்ல காத்து பகுதியை சேர்ந்த சுபகார்த்தி என்ற நபரை கைது செய்து அவர் கொடுத்த தகவலில் படி வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் பழனி தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் காவலர்கள் கார்த்திக், குணசேகரன் வேல் ஆகியோர் பெருந்துறை சென்று ஏற்கனவே கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் குடியிருந்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிசந்தா தந்தா என்ற நபரை பிடித்து அவரிடம் இருந்து 2.கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து வால்பாறை அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர்.
No comments