Breaking News

உடுமலை அருகே பொலிரோ ஜீப் டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி





.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த தியாகராஜன் தனது மனைவி இரண்டு மகன்கள் மற்றும் தனது தாயார் தகப்பனாருடன் கிணத்துக்கடவில் உள்ள தனது மாமா வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு புதிய பைபாஸ் சாலையில் நள்ளிரவில் உடுமலை வழியாக பழனி சென்றுள்ளார். அப்பொழுது எதிரே கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பழனி வந்துவிட்டு பாலக்காடு திரும்பிக் கொண்டிருந்த டெம்போ ட்ராவலர் வேனில் 23 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வாகனம்  கருப்புசாமி புதூர் அருகே வந்தபோது நேருக்கு நேர் மோதியது. இதில் பொலிரோவில் பயணம் செய்த தியாகராஜன் (45) அவரது மனைவி ப்ரீத்தி (40) மகன் ஜெய பிரியன் (11) தாயார் மனோன்மணி (65) ஆகிய நான்கு பேரும் பலியானார்கள். மேலும் தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75) மற்றொரு மகன் ஜீவப்பிரியன் (13) ஆகியோர் பலத்த காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெம்போ ட்ராவலர் வந்த 23 பேரில் 12 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் புதிய பைபாஸ் சாலையின் பணிகள் நடைபெறுவதால் ஒரே பாதையில் எதிரெதிரே இரு வாகனங்களும் சென்றதால் தான் இந்த விபத்து நடைபெற்றது என தெரியவந்துள்ளது.

No comments