கிணத்துக்கடவு தொகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க பூமி பூஜை
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சியில் ரூ. 13,50,000/- மதிப்பீட்டில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையில் எம் எல் ஏ செ. தாமோதரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் மதுக்கரை ஒன்றிய அதிமுக செயலாளர் எட்டிமடை A. சண்முகம், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை ஒன்றிய பெருந்தலைவர் உதயகுமாரி சண்முகம், கிளைச் செயலாளர்கள் வேலுச்சாமி, வெள்ளிங்கிரி, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments