Breaking News

வால்பாறையில் திமுகவினர் கொண்டாட்டம்

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு வால்பாறையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு தமிழகம் முழுவதும் திமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வால்பாறையில் திமுக அலுவலகத்தில் இருந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காந்தி சிலை வரை ஊர்வலம் ஆக சென்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கும் நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

No comments