கிணத்துக்கடவு தொகுதியில் குடிநீர் தொட்டி திறப்பு
கிணத்துக்கடவு சட்டப் பேரவை தொகுதி சொக்கனூர் ஊராட்சி சட்டக்கல்புதூர் கிராமத்தில் மலைவாழ் மக்கள் வாழும் காலனியில் ரூபாய் 8,80,000/- மதிப்பீட்டில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மேல்நிலைத் தொட்டியை செ. தாமோதரன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மதுக்கரை ஒன்றிய செயலாளர் எட்டிமடை A. சண்முகம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார், கிளைச் செயலாளர்கள் ரங்கராஜ், நாராயணசாமி, மயில்சாமி, நிர்வாகிகள் சதீஸ்குமார், சக்தி (எ) சத்தீயசீலன், கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, கார்த்திகேயன், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments