Breaking News

ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை  மற்றும் என் ஜி எம் கல்லூரியின் தேசிய மாணவர் படை இணைந்து தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
அரசு மருத்துவமனை, கடைவீதி புதியபேருந்து நிலையம், பழைய  பேருந்து நிலையம், ராஜா மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் உபயோகம் செய்து இளைஞர்களிடத்திலும், பொதுமக்களிடத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட இளைஞர்களிடத்தில் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 மூன்று மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் ரத்த தானம் செய்யலாம் என்று கூறப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமையில் நேதாஜி இளைஞர் பேரவை செயலாளர் மணிகண்டன்  முன்னிலையில் நேதாஜி இளைஞர் பேரவை  நிர்வாகிகள் நவீன் குமார், என் ஜி எம் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments