அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி பொள்ளாச்சியில் திமுகவினர் கொண்டாட்டம்
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான தி.மு.கவினர் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். உடன் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பல இருந்தனர்.
No comments