வால்பாறையில் கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்
வால்பாறை சிறுகுன்றா தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை உரம் வைக்கும் பணிக்காக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமீர் ஓரான்(25) என்பவர் சென்றுள்ளார்.
அவருடன் மேலும் 20 பணியாளர்கள் சென்றதாக தெரிகிறது. தேயிலை பயிர்களுக்கு உரம் வைத்துக் கொண்டிருக்கும்போது தேயிலை தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த கரடி ஒன்று எதிர்பாராத விதமாக அமீர் ஓரானை தாக்கியுள்ளது. இதில், அவருக்கு பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனை முதலுதவி அளிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வால்பாறையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை கரடி தக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எஸ்டேட் பகுதிகளுக்கு பணிக்கு செல்பவர்கள் 8 மணிக்கு முன்பே சென்று விடுகின்றனர். எஸ்டேட் நிர்வாகங்கள் 2 மணி நேரம் கூடுதலாக வேலைக்கு வர வற்புறுத்துவதாகவும் தெரிகிறது. இதனால் 8 மணிக்கு முன்பே 7 மணி, 6 மணி நேரங்களுக்கு செல்வதால் கரடிகள் இடம் பெயர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கரடிகள் தாக்குதலுக்கு மனிதர்கள் உட்படுகிறார்கள் என்றனர். இந்த பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் சுமூக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
No comments