பூனை பிடித்து வந்த பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு
வீட்டில் வளர்த்த பூனை பிடித்து வந்த பாம்பு கடித்து பூனையை வளர்த்த பெண் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி கோட்டூர் சாலை நேரு நகரைச்சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சாந்தி(58), இவரது மகன் சந்தோஷ் உடன் வசித்துவருகின்றனர். சாந்தி வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை வீட்டிற்கு வெளியில் இருந்த கட்டுவிரியன் பாம்பை பூனை பிடித்து வந்து சாந்தியின் படுக்கை அறையில் போட்டுள்ளது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்துள்ளது. வலியில் சாந்த கூச்சலிடவே அவரது மகன் வந்து மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாந்தி வியாழக்கிழமை உயிரிழந்தார். பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
No comments