இந்தியாவிலேயே போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகம். எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் குற்றச்சாட்டு
இந்தியாவிலேயே போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையத்தில் தார்சாலை அமைக்கும் பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பூமி பூஜையை எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன் துவக்கி வைத்தார்.
அதற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் கூறியது...போதையில் தத்தளிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி போதையின் தலைநகரமாக தமிழகம் உள்ளது.பொள்ளாச்சி அருகே மாவடப்பில் வாங்கிய கள்ளச்சாராயத்தை குடித்த மஞ்சநாயக்கனூரைச்சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடினர். சிகிச்சைக்கு பிறகு உயிர் தப்பினார்கள். தற்போது ஆனைமலை அடுத்த செமணாம்பதியில் கேரள கலால்துறையினர் எரிசாராயத்தை பிடித்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போதை வஸ்துக்கள், கஞ்சை கடத்தல் நடைபெறுகிறது. இலங்கைக்கும் இங்கிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறது. கடத்தலை தடுக்க வேண்டிய போலீஸார் வேடிக்கை பார்ப்பது வேதனையாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கொங்கு மண்டலத்தில் அதிமுக வளர்ந்து வருவதை பொறுக்க முடியாமல் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் நடந்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார்.
உடன் அதிமுக நிர்வாகிகள் ஆர்.ஏ.சக்திவேல், விஜயராணி, ஈஸ்வரமூர்த்தி, ராஜகோபால், சம்பூர்ணம் காளிமுத்து, தென்னரசு, நாகமணி உட்பட பலர் இருந்தனர்.
----
No comments