STC கல்லூரியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டிகள்
STC கல்லூரியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டிகள்
பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் விளையாட்டுத்துறை சார்பில்
12வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கல்லூரி நிறுவனர்கள் நினைவு
பூப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
கல்லூரி செயலர் விஜயமோகன் போட்டிகளை தொடங்கி வைத்தார். லீக் முறையில்
ஒவ்வொரு அணிகளும் 7 அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் தஞ்சை
மாவட்டம் திருவிடைமருதூர் திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப்பள்ளி அணியினர்
சாம்பியன் பட்டம் பெற்றனர். திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி விவேகானந்தா
மேல்நிலைப்பள்ளி அணியினர் 6 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தையும், அரியலூர்
மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினர் 5 வெற்றிகளுடன் 3ம் இடத்தையும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி அணியின் 3 வெற்றிகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
கல்லூரித்தலைவர் சேதுபதி வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் வனிதாமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சரஸ்வதி
தியாகராஜா கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் வாலிபால் விளையாட்டு வீரர்
நரேந்திரன் பங்கேற்றார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை
இயக்குனர் பாரதி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments