Breaking News

உலக அமைதியை நிலைநாட்ட ஐ.நா.சபையில் அனைத்து நாடுகள் பங்கேற்கவேண்டும். தமிழருவி மணியன் பேச்சு


உலக அமைதியை நிலைநாட்ட ஐ.நா.சபையில் அனைத்து நாடுகள் பங்கேற்கவேண்டும்

தமிழருவி மணியன் பேச்சு

உலகத்தில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபையில் அனைத்து நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்பது  வேதாத்திரி மகரிஷியின் விருப்பமாக இருந்தது என ஆழியார் அறிவு திருக்கோயிலில் நடைபெற்ற உலக அமைதி தின விழாவில் காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன் பேசினார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அறிவு திருக்கோயில் நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் 114ஆவது பிறந்தநாளை உலக அமைதி தினமாக அறிவித்திருக்கோயிலில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஆழியார் அறிவு திருக்கோயில் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தம் வரவேற்றார். முன்னால் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். 
 காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைதிக்கு மனவளக்கலை என்ற தலைப்பில் பேசியபோது., வேதாத்திரி மகரிஷி குறித்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், உலக நாடுகளில் அமைதி நிலவ ஐநா சபையில் அனைத்து நாடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது வேதாத்திரி மகரிஷியின்  விருப்பமாகும். நாட்டில் போர் நடந்தால் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும், அதற்காக ஜனநாயக சட்டமன்றம் அமைய வேண்டும். அதில் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், நிபுணர்கள் என அனைவரும் இருக்க வேண்டும் என்றார்.
 இந்த உலக அமைதி தின விழாவில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆழியாறு அறிவுத்திருக்கோயில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னச்சாமி நன்றி கூறினார்.

---

No comments