Breaking News

அன்னூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்.


 அன்னூர் தெற்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.தனபாலன் தலைமை வகித்தார். இதில் சிறப்பாக அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தொ.அ ரவி கலந்து கொண்டு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்  என்று அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர்கள் அசோக்பாபு,  எம்.என்.கே செந்தில், மாவட்ட கவுன்சிலர் அபிநயா ஆறுக் குட்டி, பொறியாளர் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் அம்பாள் நந்தகுமார், அன்னூர் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் கே.சி.கே விஜயகுமார் மற்றும் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments