சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
பொள்ளாச்சி சார் ஆட்சியாளரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,வால்பாறை பரமசிவம் கோரிக்கை மனு வழங்கினார்.
வால்பாறை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு அதிக அளவு கூட்டம் வருகிறது. இங்கு போதிய மருத்துவர் ,ஊழியர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றன. வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெறிச்சோடி கிடைக்கிறது. அங்கிருக்கும் ஊழியர்களே தற்காலிகமாக இங்கு பணி அமைத்தினால் இங்குள்ள மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும் மேலும் தற்பொழுது வால்பாறை பகுதியில் அதிகம் காய்ச்சல் இருப்பதால் வால்பாறை, எஸ்டேட் பகுதிகளில் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கும் கொசு மருந்து அடிப்பதற்கும் சார் ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டது
செய்தியாளர் குமார்
No comments