Breaking News

அன்னூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம்.


 அன்னூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ந.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் சிறப்பாக அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தொ.அ ரவி கலந்து கொண்டு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் திமுக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் இல்லந்தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையில் அதிக அளவில் இளைஞர்களை இணைக்க வேண்டும் என்று அவர்அறிவுறுத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் எம்.என்.கே செந்தில், திமுக நிர்வாகிகள் சண்முகவேலாயுதம், சுரேந்திரன், சஞ்சீவ், சிவராஜ், பொகளூர் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments