Breaking News

உடுமலையில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா

உடுமலையில் பெரிய கடை வீதியில் உள்ள நூறு ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உடுமலை பெரியகடை வீதி, சீனிவாச பெருமாள் கோவிலில், சீனிவாசபெருமாளுக்கு, பால், தயிர், நெய், வெண்ணெய், இளநீர், தேன், பழச்சாறு உள்ளிட்ட 16 வகையான   திரவியங்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், குழந்தை வடிவில், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன், சிறப்பு அலங்காரத்தில், சீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில்களில் திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

No comments