Breaking News

வால்பாறை ஆலமரத்து முனீஸ்வரர் கோயிலில் ஆடி பதினெட்டு, அமாவாசை சிறப்பு வழிபாடு

வால்பாறை ஆலமரத்து முனீஸ்வரர் கோயிலில் ஆடி பதினெட்டு, அமாவாசை சிறப்பு வழிபாடு 
வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். 

இங்கு தரிசனத்திற்காக வால்பாறை, மற்றும் சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள்.

 இங்கு ஐந்து ஆல மரங்களின் கீழ் முனீஸ்வரர், துர்க்கைஅம்மன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐந்து தெய்வங்கள் உள்ளன.

 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை மற்றும் சனிக்கிழமை ஆடி 18 முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அருகில் உள்ள ஆற்றில் குளித்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

No comments