91 லட்சம் மதிப்பில் கிணத்துக்கடவு தொகுதியில் பூமி பூஜை
91 லட்சம் மதிப்பில் கிணத்துக்கடவு தொகுதியில் பூமி பூஜை
பொள்ளாச்சி, ஆக.4-
கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதியில் ரூ.91 லட்சம் மதிப்பில் பூமி பூஜை பணிகளுக்கு எம்எல்ஏ செ.தாமோதரன் அடிக்கல் நாட்டினார்.
கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ செ.தாமோதரன் தனது தொகுதி நிதியில் இருந்து வெள்ளலூர் பகுதியில் புதிய நூலகம் அமைக்க ரூ.10 லட்சம், வெள்ளலூர் பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வடிகால் அமைக்க ரூ.16 லட்சத்து 50 ஆயிரமும்,மூலக்கடை ஜெயப்பிரகாஷ் வீதியில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிறு பாலம் அமைக்கவும், அம்மன் கோயில் வீதி முதல் இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளி வரை வடிகால் அமைக்க ரூ.10 லட்சமும், வெங்கட்ரமணா பகுதியில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்க ரூ.20 லட்சமும், போத்தனூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வடிகால் அமைக்க ரூ.15 லட்சமும் என மொத்தம் ரூ.91 லட்சம் மதிப்பில் பணிகளுக்கு பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ செ.தாமோதரன் பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், அதிமுக நிர்வாகிகள் சண்முகராஜா, மருதாசலம், கணேசன், கண்ணையன் உட்பட பலர் பங்கேற்றனர்.
91 லட்சம் மதிப்பில் கிணத்துக்கடவு தொகுதியில் பூமி பூஜை
Reviewed by Cheran Express
on
August 04, 2024
Rating: 5
No comments