பொள்ளாச்சியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை
பொள்ளாச்சியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை
பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் ஓம் பிரகாஷ் திரையரங்கம் அருகே மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபான கடையின் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (22) என்பவர் கொலை செய்யப்பட்டார். இவர் சூளேஸ்வரன் பட்டியில் தற்காலிகமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
மோதிராபுரத்தை சேர்ந்த விமல் (22), சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பைசல் (33) ஆகிய இருவரையும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
No comments