உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
உடுமலை பஸ் ஸ்டாண்ட் உள்ளே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு
நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வதால் உடுமலை பஸ் ஸ்டாண்ட் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்ள வணிக வளாகத்திற்குள் ஹோட்டல்கள் பெட்டிக்கடைகள் டீக்கடைகள். பேக்கரிகள். செல்போன் சர்வீஸ் சென்டர் ,பூக்கடை பழக்கடை என பல்வேறு கடைகளில் இயங்கி வருகின்றன.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பஸ் ஸ்டாண்டிற்குள் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர் இது தவிர பயணிகளை பேருந்து ஏற்றி விடுவதற்காக வரும் வாகன ஓட்டிகளும் உறவினர்களை பேருந்துகளை தேடிப்பிடித்து ஏற்றி விடும் வரை தங்களது வாகனங்களை பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் அரசு பேருந்துகள் நிறுத்துவதற்கு அல்லது திரும்புவதற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையிலும் தொடர்ந்து இது போன்ற விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருகிறது எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் புறக்காவல் நிலைய போலீசார் ஒன்றிணைந்து பஸ் ஸ்டாண்டுக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு பேருந்து நிலையத்திற்குள் விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments