ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு
ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு
ஆழியார் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் தோட்டத்தில் வேலுச்சாமி என்பவர் வழக்கம் போல அன்றாட பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது புதன்கிழமை மதியம் மலை பாம்பு ஒன்று அங்குள்ள ஓலைகளுக்குள் தென்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலுச்சாமி இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சுமார் 12 அடி நீளம் உள்ள மலை பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர்.
No comments