Breaking News

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

 தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை திமுகவினர் நடத்தி வருகின்றனர். அதன்படி மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலின்படி பெரிய நெகமம் ஸ்ரீ தங்கவேல் அய்யன்  கே.வி.கே.திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.கே.எஸ் சபரி கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திருமலைராஜா வரவேற்று பேசினார்.   பேரூர் கழக செயலாளர் ராசு (எ) முத்துக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சல்மான்கான் நாசர்,புவனேஷ், நிஷாந்த், சபரி கிருஷ்ணன், உதய பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாக மாநில செய்தி தொடர்பு துறை செயலாளர் இளங்கோவன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் தமிழ் க. அமுதரசன், தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கோவை தெற்கு மாவட்ட செயலாளர்  தளபதி முருகேசன்,  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும் , கழக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளருமான கே.ஈ.பிரகாஷ், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதியை பற்றி  சிறப்பாக பேசி  வெற்றி பெற்று  முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை ரூபாய் 10000 மற்றும்  சான்றிதழ்களை வழங்கினர். இதில், திமுக நிர்வாகிகள் இளைஞர் அணியினர் மகளிர் அணியினர் ஆகியோர் உடன் இருந்தனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் நன்றியுரை கூறினார்.
விளம்பரம்.... மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் சேர அட்மிஷன் நடைபெற்று வருகிறது. டிகிரி முடித்தவர்கள் ஆறு மாத டிப்ளமோ, 12-ம் வகுப்பு,, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் ஒரு ஆண்டு டிப்ளமோ சேரலாம்.
தொடர்புக்கு.. 8667880207 போன் அல்லது வாட்ஸ் அப் செய்யலாம்.

No comments