Breaking News

மாசாணி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள்

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள் வெள்ளி சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் மாசாணி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேக பணிகள் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து சமீபத்தில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசின் உத்தரவுப்படி கும்பாபிஷேகம் நடத்த தற்போது பணிகள் துவங்கியுள்ளது. கோயில் சாலகாரம் மராமத்து செய்து வர்ணம் பூசும் பணிக்காக 21 லட்சத்து 50 ஆயிரம், கோயில் ராஜகோபுரம், மூலவர் விமானம், சன்னதி மற்றும் உபசன்னதிகள் மராமத்து செய்யும் பணிக்கு 37 லட்சத்திலும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
விளம்பரம்.... மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் சேர அட்மிஷன் நடைபெற்று வருகிறது. டிகிரி முடித்தவர்கள் ஆறு மாத டிப்ளமோ, 12-ம் வகுப்பு,, பத்தாம் வகுப்பு படித்தவர்கள் ஒரு ஆண்டு டிப்ளமோ சேரலாம்.
தொடர்புக்கு.. 8667880207 போன் அல்லது வாட்ஸ் அப் செய்யலாம்.

No comments