பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சுதந்திர தின கொண்டாட்டம்
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். ராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைத்து ஊழியர்கள் மற்றும் நோயாளி நல சங்க உறுப்பினர்கள் மற்றும் பொள்ளாச்சி போட்டோகிராபர் அசோசியேசன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையில் சென்ற ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மருத்துவமனை கண்காணிப்பாளர் மூலம் வழங்கப்பட்டது.
மருத்துவமனையின் யோகா மருத்துவர் டாக்டர் அர்ச்சனா மருத்துவமனையில் அனைவரையும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எளிமையாக தினமும் எப்படி யோகா செய்ய வேண்டும் என்று கூறினார்.
மனநல மருத்துவர் டாக்டர் கிருத்திகா அவர்கள் எப்படி டென்ஷன் இல்லாமல் இருப்பது அதற்கு மெடிடேஷன் எப்படி செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் செய்து காண்பித்தார்கள்.
பள்ளி மாணவர்கள் யோகாசனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக செய்து காண்பித்தார்கள்.
பொள்ளாச்சி போட்டோகிராபர் அசோசியேஷன் மூலமாக நோயாளிகள் அனைவருக்கும் பிரட் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
No comments