வால்பாறையில் இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம்
வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பேச்சிமுத்து சிறப்புரையாற்றினார். மாநில பேச்சாளர் திருநாவுக்கரசு வரவேற்றார்.நகரத்தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். நகரப்பொதுச்செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார். பாஜக சார்பில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கே.எம்.தங்கவேல், வால்பாறை மண்டலத்தலைவர் எம்.ஆர்.கே.பாலாஜி, மண்டல பொதுச்செயலாளர் செந்தில்முருகன், சுனில் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இந்து அமைப்பச்சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
---
No comments