பள்ளபாளையம் வேதவியாஸ் வால்டாரப் பள்ளியில் விமர்சியாக நடத்தபட்ட இந்திய வண்டி உணவுப்பண்டிகை
பள்ளபாளையம் வேதவியாஸ்
வால்டாரப் பள்ளியில் விமர்சியாக நடத்தபட்ட இந்திய வண்டி உணவுப்பண்டிகை
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பள்ளபாளையத்தில் இயங்கிவரும் வேதவியாஸ் வால்டாரா பள்ளியில் டேஸ்ட் ஆப் பாரத் மூலம் இந்திய வண்டி உணவுப்பண்டிகை (Indian street food festival) மிக விமர்சையாக நடந்தது.
வேதவியாஸ் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 8 மாநிலங்களின் பாரம்பரிய உணவு பதார்த்தங்களை தயாரித்து பெற்றோர்களுக்கு வழங்கினர் சுய கலைகளில் ஒன்றான சமையல் கலை பள்ளியில் பாட திட்டத்தில் ஒன்றாக பிணைந்துள்ள நிலையில் மாணவச்செல்வங்கள் மிகுந்த உற்சாகத்துடன் உணவு வகைகளை தயாரித்தனர்.
மகாராஷ்டாவின் நிம்புபாணி, ராஜஸ்தானின் சுருமா லட்டு, மத்திய பிரதேசத்தின் இந்தோரி போகா, காஷ்மீரின் காவா, கர்நாடகத்தின் கேசரிவாத், தமிழகத்தின் சேலம் நொருக்கல், மேற்கு வங்கத்தின் ஜல்மோரி போன்ற பதார்த்தங்கள் ஸ்டால்களில் ஸ்லைடிங் ஸ்கேல் முறையில் விற்பனை செய்யப்பட்டடது.
உணவு உண்பதால் மட்டும் உணவல்ல உழைப்பின் விளைவால் உண்பதே உணவு என்பதை உணர்த்தும் மகத்தான வால்டார்ப் பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கும் குழைந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து செயல்பட்ட ஆசிரியர்களுக்கும் விழாவில் பங்கு பெற்ற பெற்றோருக்கும் இறுதியாக வேதவியாஸ் வால்டார்க் பள்ளி நிறுவனம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்திய திருநாட்டின் பன்முக கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பல்வேறு உணவு வகைகளை குழந்தைகளும் கற்று அனைவருக்கும் சுவையாக தயாரித்துக்கொடுத்தது பாராட்டுக்குரியதாய் அமைந்திருந்தது.
No comments