திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 


பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ. பி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 44 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.
திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.
முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார்.
No comments